தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ரயில் நிலையத்தில் கிழிந்து தொங்கும் தேசியக் கொடி! - Madurai district news

மதுரை: ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயிலின் முன்புள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி கிழிந்து தொங்கப்பட்டதையடுத்து, அதனைச் சரிசெய்ய ரயில்வே துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் கிழிந்து தொங்கும் தேசியக்கொடி!
மதுரை ரயில் நிலையத்தில் கிழிந்து தொங்கும் தேசியக்கொடி!

By

Published : Jul 9, 2020, 5:12 PM IST

மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் கிழக்கு வாயிலில் முன்பாக மிகப் பிரம்மாண்டமான 60 அடி உயரமுள்ள தேசியக் கொடிக் கம்பம் ஒன்று உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட இந்தக் கொடிக்கம்பத்தில் இந்தியத் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கத் தொடங்கியது.

ஆனால், கடந்த சில நாள்களாக இக்கொடி கிழிந்து தொங்கியதையடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அக்கொடி கீழே இறக்கப்பட்டு, அதனைச் சரிசெய்வதற்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details