மதுரை மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் உள்ளூரில் உள்ள அங்கன்வாடி மையம், பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லமுடியாத நிலை இருந்தது. இதனை சரிசெய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கிட மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை அடுத்து ஒரு பிரிவு மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டுள்ளன.