மதுரை:தமிழ்நாட்டில் சமீபத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றமும், 27 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இதில் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த செந்தில் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆணையராக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் மதுரை மாநகரின் புதிய ஆணையராக இன்று (ஜனவரி 11) பொறுப்பேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.எஸ்.நரேந்திரன் நாயர் 2005ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்தவராவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னை காவல்துறையில் துணை ஆணையராக பொறுப்பு வகித்தவர்.
மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார்
மதுரை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார்
பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட திருவிழாக்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை மேற்கொள்ளும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மதுரை மாநகரில் ரவுடிசம் போதைப்பொருள் ஆகியவை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றார்.