தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அரசுக்கு பாடம் புகட்டும்’ - ஜவாஹிருல்லா - நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அரசுக்கு பாடம் புகட்டும்

மதுரை: மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக அரசுக்கு நாளை நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Jawahrullah

By

Published : Oct 21, 2019, 7:32 AM IST

மதுரை மாவட்டம் புறநகர்வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்களுக்கு கசாயம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நீட் தேர்வில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய இட ஒதுக்கிட்டு முறை பின்பற்றபடமாட்டாது என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கக்தக்கது. நீட் தேர்வு என்பது ஏழை எளிய நடுத்தர மருத்துவ மாணவ மாணவிகளின் கனவுகளை பொய்யாக்கக் கூடிய தேர்வாகும். சமூகநீதிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு தமிழ்நாடு மக்களை காவு கொடுக்கும் அதிமுக அரசுக்கு மக்கள் நாளை நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்' என்றார்.

இதையும் படிங்க: "இதையும் மீறி கடைய அடைச்சா தற்கொலை செஞ்சுக்குவோம்" - சத்தியம் செய்த மதுப்பிரியர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details