தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை சிறையில் உள்ள நந்தினியின் திருமணம் தள்ளிவைப்பு! - மது ஒழிப்பு

மதுரை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் நந்தினிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால், அவரின் திருமணம் ஜூலை மாதம் 5ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், வேறொரு நாளில் நடைபெறும் என்று நந்தினியை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குணா ஜோதிபாசு கூறியுள்ளார்.

nandhini

By

Published : Jul 2, 2019, 7:36 PM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது தந்தையுடன் இணைந்து மது ஒழிப்பு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக துணிச்சலாகப் போராடி வருபுவர். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது போதைப் பொருளா, உணவுப் பொருளா, மருந்துப் பொருளா என்றும், இந்திய குற்றவியல் சட்டம் 328படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குற்றமில்லையா..? என்று நந்தினி வாதிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தை அவதூறு செய்த குற்றத்துக்காக நந்தினியை ஜூலை 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டார். இதனையடுத்து நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நந்தினிக்கு வருகின்ற 5ஆம் தேதி குணா ஜோதிபாசு என்பவருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நந்தினியின் ஜாமீன் மறுக்கப்பட்டதால் திருமணம் வேறொரு நாளில் நடைபெறும் என்று அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குணா ஜோதிபாசு கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details