மதுரை:தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாகர்கோவில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இன்று (நவ.20) இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128) மற்றும் நாளை (நவ.21) காலை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ஆகியவை திருநெல்வேலி - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16723) மற்றும் நாளை மாலை கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16724) ஆகியவை நாகர்கோவில் - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் பாதையில் நிலச்சரிவு
நாளை காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) மற்றும் முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் போக்குவரத்தில் மாற்றம்
நாளை திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரயில் (06070) திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். நவம்பர் 20, 21 ஆகிய நாள்களில் இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Heavy rain alert: 5 நாள்களுக்குத் தொடரும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறைவிட வாய்ப்பு