தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுர பாஷைதான் இந்த விருதுக்கு காரணமே' - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் - மதுரை மாணவர் நாகவிஷால்

கேடி என்ற கருப்புதுரை படத்தில் நான் பேசிய மதுரை வட்டார வழக்குதான் எனக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவர் நாகவிஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்
குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்

By

Published : Mar 24, 2021, 3:37 AM IST

திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. 2019ஆம் ஆண்டிற்கான 67ஆவது தேசிய விருது பட்டியல் மார்ச் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்த்திரைப்படத்துறை ஏழு தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அவற்றில் கேடி என்கிற கருப்புதுரை திரைப்படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேடி என்ற கருப்பத்துரை

மதுரையிலுள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளயில் தற்போது 9ஆம் வகுப்பு பயிலும் நாகவிஷால் தொலைபேசி மூலமாக ஈடிவி பாரத் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், "மதுரையின் வட்டார வழக்குதான் எனக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இதற்காக நான் மிகவும் பெருமை கொள்கிறேன். எனக்கு படங்கள் பார்க்கப் பிடிக்குமே தவிர, நடிக்கப் பிடிக்காது. என்னுடைய அம்மாவின் நண்பர் ஒருவர் என்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்வதற்கு நடைபெற்ற தேர்வுக்காக குற்றாலம் அழைத்துச் சென்றார்.

தாத்தாவுடன் லூட்டி - கேடி கருப்பத்துரை
அங்கு என் வயதை ஒத்த 250 சிறுவர்கள் வந்திருந்தனர். எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனாலும், தேர்வு செய்ய வந்தவர்கள், ஒரு காட்சியைச் சொல்லி இதற்கு மட்டும் நீ நடித்துக் காட்டு போதும் என்றார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் வயதான பெரியவரை எழுப்பும் அந்தக் காட்சியில், மதுரையின் வட்டார வழக்குடன் பேசி நடித்துக் காட்டினேன். அது அனைவருக்கும் பிடித்துப் போனது. அதனால் இந்தப் படத்தில் நடித்தேன். விருதுகள் பெறுவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்டது. இந்தப் படத்திற்காக ஏற்கனவே நான்கு விருதுகளைப் பெற்றுள்ளேன். இது எனக்கு ஐந்தாவது விருதாகும். என்னுடைய அம்மாவுக்கு மிக மிக சந்தோஷம். அப்பா இல்லை. அண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செக்யூரிட்டியாகப் பணி செய்கிறார். அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. மற்றொரு அண்ணன் நான் படிக்கும் மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியிலேயே 10ஆம் வகுப்பு படிக்கிறார். என் பெற்றோருக்கு நான் 4ஆவது குழந்தை.
மதுரை மண்ணின் மைந்தன் நாகவிஷால்
தமிழ்த்திரையுலகத்திலிருந்து பெரிய நடிகர்கள் யாரும் இதுவரை அழைத்துப் பாராட்டவில்லை. தற்போதுதான் ஒவ்வொருவருக்கும் தகவல் தெரிந்து, செல்பேசியில் அழைத்து வாழ்த்திவருகிறார்கள். எனக்குள் நடிப்பார்வம் மேலும் துளிர்விட்டுள்ளது. நிறைய படங்கள் நடிக்க வேண்டும். திரைப்படத்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்துள்ளது. வாய்ப்புக் கொடுத்தால் இயக்குநர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுப்பேன். என்னுடைய பள்ளி நிர்வாகத்தினர் 8ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்தே எனக்கு ஊக்கமளித்து பாராட்டிவருகிறார்கள். என்னுடைய ஆசிரியர்களுக்கு மிகப் பெருமை" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details