பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகனும் இணைந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா 3 நாள் பயணமாக வரும் 29ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
'நட்டாவின் வருகையால் தமிழ்நாட்டில் பாஜக வலுப்பெறும்' - Nadda tamil nadu visit
மதுரை: பாஜக தலைவர் நட்டாவின் தமிழ்நாடு வருகை மாநில பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
நட்டாவின் வருகை மாநில பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கும் அதிகாரத்தில் பங்கு பெறவும் உதவியாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் 5 லட்சத்து பத்தாயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை வழங்கியுள்ளார். அத்திட்டங்கள் பெரும்பாலானவை தமிழ்நாட்டு மக்களை சென்றடைந்துள்ளன.
ஆகையால் இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறும் என நம்புகிறோம். மாநிலத்தில் பாஜக வளர்ந்துவருகிறது, குறிப்பாக பாஜக நடத்திய வேல்யாத்திரை, நம்ம ஊர் பொங்கல் போன்ற நிகழ்வுகள் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் மக்களிடம் பாஜக பிரபலமடைந்துள்ளது" என்றனர்.