தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமல்ஹாசனுடன் கூட்டணியா? சீமான் பதில் - nam tamilar seeman madurai visit

மதுரை: ஒரே ஊருக்காரர் என்பதால் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் கூறவே அவரை சந்தித்ததாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்தார்.

nam tamilar seeman
nam tamilar seeman

By

Published : Dec 9, 2019, 8:23 AM IST

மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "ஒரே ஊருக்காரர் என்பதால் கமலுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காகவே சந்தித்தேன், அது ஒரு மரபு. ஆதரவு என்றால் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்போம். திமுக ஏற்கனவே உச்சநீதிமன்றம் சென்றது. இந்த ஆட்டத்தில் நாங்கள் இல்லை. தேர்தல் அறிவித்தால் நாங்கள் போட்டியிடுவோம், அதுதான் நமது ஆட்டம்.

அரசை சாடி பேசும் சீமான்

காரை ஏற்றுமதி செய்வது, உணவு பொருட்களை இறக்குமதி செய்வார்கள் இது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். சொந்த நாட்டை பட்டினி போட்டுவிட்டு அடுத்த நாட்டிற்கு வெங்காயம் எவ்வாறு ஏற்றுமதி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பெட்ரோலை விட வெங்காயம் விலை அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்த பற்றாக்குறையை நாம் சந்திக்கிறோம்.

தலைக்கவசம் மாட்டிக்கொண்டு வெங்காய வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கிடைக்கும் என்று விளம்பரம் வந்துவிட்டது. இதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை, சிந்திப்பதும் கிடையாது. 150 கோடி மக்களை வைத்துக்கொண்டு உணவு அளிப்பதை பற்றி அரசு சிந்திக்கவே இல்லை.

100 கோடி மக்களுக்கு கார் மற்றும் செல்போன் கொடுப்பதற்கு திட்டம் உள்ளது. நீரும் சோறும் கொடுப்பதற்கு திட்டங்கள் எதுவுமில்லை. எந்த நிதிநிலை அறிக்கையிலும் வரைவு இல்லை. பிரச்னை என்றால் சாதி, மதம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்கள். பொங்கல் பரிசு கொடுப்பது தேர்தலில் வாக்கு வாங்குவதற்காக மட்டும்.

நமக்குத் தேவையான அளவு மழை பொழிகிறது. ஆனால் நீரை தேக்கி வைப்பதற்கான நீர்நிலைகள் சரிவர பராமரிப்பதில்லை" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details