மதுரை நெல்லை பேட்டை பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பல்வேறு இஸ்லாமியர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், வேடிக்கை பார்க்கும் டெல்லி காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு: இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல் - சிஏஏ, என்ஆர்சி எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல்
மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மதுரையில் தொடர் போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய அமைப்பினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
![சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு: இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல் muslim people road block against CAA and NRC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6205937-thumbnail-3x2-ja.jpg)
muslim people road block against CAA and NRC
இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல்
இந்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் போராட்டக்காரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், போராட்டக்காரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:ஆந்திர போலீஸால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு!