தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்பை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற கும்பல்! - மதுரையில் நடந்த கொலை

மதுரை : சட்டத்துக்குப் புறம்பாக போதைப் பொருள் விற்றுவந்ததை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ட கும்பல்

By

Published : Oct 1, 2019, 10:31 AM IST

மதுரை மாவட்டம், மேலவாசல் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மாரிச்செல்வம், தற்போது திருந்தி ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் சட்டத்துக்கு புறம்பாக போதைப் பொருள் விற்று வந்துள்ளார். இதனைக கண்டித்து ஜெபமணியின் தாயாரிடம் மாரிச்செல்வம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்

இதனால், ஆத்திரமடைந்த ஜெபமணி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு திடீர்நகர் காவல் நிலையம் எதிரே மாரிச்செல்வத்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக குத்திக் கொலை செய்தார்.

பின்பு, ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மாரிசெல்வத்தை மீட்ட அப்பகுதி மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம்
ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்

இச்சம்பவம் தொடர்பாக ஜெபமணி, ஜெபமணியின் தாயார் விஜயா, அய்யம்மாள், முத்துக்குமார் ஆகிய நான்கு பேரையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கட்டட கரண்டியால் ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை - அதிர்ச்சி வீடியோ

ABOUT THE AUTHOR

...view details