தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதத்தில் ஓட்டுநர் குத்திக் கொலை! - ஓட்டுநர் படுகொலை

மதுரை: வாடிப்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வேன் ஓட்டுநரைக் குத்திக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோத்தில் ஓட்டுநர் குத்திக் கொலை

By

Published : May 1, 2019, 9:45 AM IST

வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிரி. இவர் அப்பகுதியில் மினி வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணி பாரதிக்கும் தொழில் சம்பந்தமாக விரோதம் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணி பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கிரியை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல் துறையினர், கிரியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வாடிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளி மணி பாரதியை கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details