தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் பல கோடி ரூபாய் மோசடி - சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு - Madurai district News

மதுரை: பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் நடந்த பல கோடி மோசடி வழக்கில், சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Multi-crore scam case in punjab national bank branches
Multi-crore scam case in punjab national bank branches

By

Published : Sep 10, 2020, 9:56 PM IST

பழநி - லட்சுமிபுரம் ஓய்வுபெற்ற பேராசிரியர் கனகராஜூ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'கோவை, திண்டுக்கல், பழனி ஆகிய ஊர்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் ஒருவர் (சரவணன்); பல்வேறு கிளைகளில் பல பெயர்களில் 58 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஈடாக வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே பிணைத்தொகை பெறப்பட்டுள்ளது. உரிய பிணைத்தொகை இன்றி, வங்கி மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் முற்றிலும் விதிமுறைகளைமீறி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு வங்கியின் சில அலுவலர்கள் உடந்தை. இந்த முறைகேடு குறித்து வங்கி நிர்வாகம், சிபிஐக்கு புகார் அனுப்பினேன். இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த பல கோடி ரூபாய் பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. இது குறித்து சிபிஐ இயக்குநர், சென்னை சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details