சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53), இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15இல் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார்.
சமூக ஆர்வலர் முகிலனின் ஜாமீனை தளர்த்தி உத்தரவு - high court bench madurai
மதுரை: சமூக ஆர்வலர் முகிலனின் ஜாமீனை தளர்த்தி வாரம் ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கையெழுத்திடுவதில் இருந்து நிபந்தனை தளர்த்தக் கோரி முகிலன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருத்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திடுவதில் இருந்து தளர்த்தி வாரம் ஒருமுறை கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.