தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட இடங்களில் இருக்கும் தேர்தல் விளம்பர போஸ்டர்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குள்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் போஸ்டர்கள், வேட்பாளர்கள் விளம்பரங்கள் உள்ளிட்டவை நகர ஒன்றிய ஆணையர் பழனிச்சாமி உத்தரவின்படி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றினர்.