தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலைக்கழக பெயரில் பிழை - திருத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவு - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ள பிழையை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 8:08 PM IST

மதுரை: நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பெயரில் மனோன்ம(ணீ)யம் என்பதே சரி என்தால் பிழையை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருப்பூரைச் சேர்ந்த முத்து சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணையின் போது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றியவரான சுந்தரம்பிள்ளை மனோன்மணீயம் என்ற நாடகத்தையும் இயற்றியதால் அந்த அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். ஆனால் பல்கலைக் கழகத்தின் பெயரில் மனோன்மணியம் என்று பிழையாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே பெயரில் உள்ள பிழையை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் மனுவை பரிசீலித்து 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றிய சுந்தரம்பிள்ளையின் நினைவாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details