தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்' - MP Venkatesh

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி, சிவகளையை சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து அப்பகுதிகளில் திறந்தவெளி அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்குமாறு வேண்டுகோள்
கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்குமாறு வேண்டுகோள்

By

Published : Jul 29, 2021, 6:16 PM IST

மதுரை:இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது.

அதைப்போன்று தமிழ்நாடு அரசும் கீழடி, சிவகளை பகுதிகளை சங்ககால வாழ்விடப் பகுதிகளாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும். அகழாய்வுக் குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றது.

கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்குமாறு வேண்டுகோள்

அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம்விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்றுத் துறைக்குச் செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.

அந்த வகையில் கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கீழடி, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்குமாறு வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details