இதுகுறித்து சு. வெங்கடேசன் இன்று (பிப். ) செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாபா அணு மின் நிலையம் சார்பில் பதில் அளித்துள்ள அதன் கண்ட்ரோலர் கே. ஜெயக்குமார் தனது கடிதத்தில், உதவித் தொகையுடனான பயிலுநருக்கான ( பிரிவு 1 & 2) தேர்வுகள் மூன்று கட்டங்களாக - தொடக்க நிலைத் தேர்வு, முன்னேற்ற கட்ட தேர்வு, திறனறித் தேர்வு என நடைபெற வேண்டியுள்ளதால், விண்ணப்ப நிலையில் இருந்து தேர்வுப் பட்டியல் வெளியிடும் வரையிலான பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டே நடத்தப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஏராளமாக வரப்பெறுவதாலும் எழுத்துத் தேர்வை ஒன்றிற்கு மேற்பட்ட மையத்தில் நடத்துவதில் சிரமம் இருக்கிறது என்றாலும் விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு, சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.