சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''மனுதர்மத்தை பாஜக ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நேரடியாக மக்களைப் பார்த்து மனு தர்மத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை விளக்கிக் கூற வேண்டும். இந்திய சாசனத்தைவிட மனுதர்மம் உயர்ந்ததா என்பதை முதலில் பாஜக தெரிவிக்க வேண்டும்.
திருமாவளவன் பேசியதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். அதற்கு முதலாக அவருடைய நிலைப்பாட்டைத் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்புதான் விமர்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆளுநர் மிக விசித்திரமானவர். எதற்கெல்லாம் ஒப்புதல் வழங்க வேண்டுமோ அதற்கெல்லாம் ஒப்புதல் வழங்குவதில்லை. எதற்கு ஒப்புதல் வழங்கக் கூடாதோ அதற்கு ஒப்புதல் வழங்கிவருகிறார்.