மதுரைஅருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த கந்தசாமி (62) - ராஜேஸ்வரி(60) தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மற்றொரு மகனான அழகர்சாமி (எ) குணா என்பவர் பெத்தானியாபுரத்தில் தனியே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அழகர்சாமி மதுப்பழக்கத்திற்கு ஆளாகி பொறுப்பற்ற முறையில் இருப்பதாகக் கந்தசாமியும், ராஜேஸ்வரியும் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் மன வேதனை அடைந்த தம்பதி மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அமர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.