மதுரை:ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர், சந்தோஷ் குமார் (29). இவர் கணினி மென்பொருள் வல்லுநர் ஆக வெளிநாட்டில் பணி புரிந்து வந்தார். பின்னர் சொந்த ஊர் மதுரைக்கே வந்து விட்டார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.