மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி உஷா (வயது 25). இவர்களுக்கு 8 வயதில் மகிமா என்ற பெண் குழந்தை இருந்தது. மோகன்ராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
நவம்பர் 22ஆம் தேதி மோகன்ராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, வழக்கம் போல் கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த உஷா தனது 8 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.