மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் கொசுக்களால் பரவி வரும் நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசின் போதிய நடவடிக்கையின்மையே காரணம். கொசு ஒழிப்பு பணிக்கு நிரந்தர பணியாளர்கள் இல்லை. தற்காலிக பணியாளர்களும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் போதிய அக்கறை செலுத்தவில்லை.
‘கொசு ஒழிப்பு தொடர்பான வழக்கு தள்ளுபடி’ - கொரோனா
மதுரை: கொசுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கொசுவை ஒழிக்க அடிக்கப்படும் மருந்தால் கொசு ஒழிந்தபாடில்லை. கொசு ஒழிப்பு தொடர்பான அரசின் உத்தரவுகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவை தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, கொசுவால் பரவும் நோயால் உயிரிழந்தோருக்கு அரசு சார்பாக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கொசுக்களை ஒழிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள கொசு ஒழிப்பு மையத்தில் நிரந்தர பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை வழங்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.