மதுரை:திருமங்கலம் அருகே கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா (Non Vegetarian Festival in Madurai) இன்று (ஜன.7) நடைபெற்றது. இதில் சுமார் 65 கிடாக்கள் வெட்டப்பட்டு, 2,000 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட நிலையில், சுமார் 10,000 ஆண்கள் இந்த கறி விருந்தில் கலந்துகொண்டனர்.
கரடிக்கல் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இரவு நேரத்தில் கிடா வெட்டி அதிகாலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.