மூக்கையா தேவரின் 40ஆவது குருபூஜை உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரியிலுள்ள அவரது நினைவிடத்தில் இன்று நடைபெற்றது.
மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைமுதலமைச்சர்! - உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில் மூக்கையா தேவரின் குருபூஜை
மதுரை: மூக்கையா தேவர் சிலைக்கு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை
அந்நிகழ்வில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் புறப்பட்டனர். இதனிடையே விழாவுக்குச் செல்லும் வழியில், மதுரை அரசரடியில் அமைந்துள்ள மூக்கையா தேவரின் திருவுருவச் சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!
உடன் அதிமுக எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.