கரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்கணிக்கப்பட்டுவருகிறது. அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ்.ஒ.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர், தோப்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறார்.
மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு - ட்ரோன் கேமரா
மதுரை: உசிலம்பட்டியில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
அதையடுத்து எஸ்.ஒ.ஆர். நகர் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து மக்கள் வெளியேறுவதை உடனடியாக கண்டறிய ட்ரோன் கேமராவை காவல் துறையினர் பயன்படுத்திவருகின்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜா கூறுகையில், "ட்ரோன் கேமரா மூலம் வெளியில் சுற்றுபவர்களை எளிதில் அடையாளம் கண்டு அவர்களுக்கு அறிவுரைகள், தண்டணைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மதுரையில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ. 77 லட்சம் அபராதம்!