தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல்! - திருப்பாங்குன்றம்

மதுரை: சமயநல்லூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

money seized

By

Published : May 9, 2019, 12:40 PM IST

தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, திருப்பாங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் முக்கியப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை சமயநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வம் என்பவரது காரினை சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

அப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் பணம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details