மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் வெங்கல கடைத்தெரு பகுதியில் அரிசி மாவு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் இருந்து 4 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்போது
முனிச்சாலை அருகே வந்தபோது வாகனத்திலிருந்து பை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளது.
அதனை கவனிக்காத சக்கரவர்த்தி வீடு சென்ற பிறகு வண்டியில் பை இல்லை என்பதை அறிந்து வந்தவழியே முழுவதும் தேடிபார்த்துள்ளார். பை கிடைக்காததையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வண்டியில் இருந்து தவறி விழுந்த பையை அந்த வழியாக வந்த தம்பதிஎடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
பணத்தை எடுத்துச்செல்லும் தம்பதி தற்போது இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் அந்த தம்பதியை தேடி வருகின்றனர்.