தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்துவருவதாகப் புகார் எழுகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் ரூ.1,000 பணம் கொடுப்பது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.