மதுரை மாவட்டம் மனிநகரைச் சேர்ந்தவர் கண்பார்வையிழந்த பூரண சுந்தரி. இவர் ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இவரது, வீட்டிற்குச் சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், பூரண சுந்தரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "மணிநகரத்தைச் சேர்ந்த பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று எனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தேன்.
அதனை தொடர்ந்து, இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு eSIGHT என்ற சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டிலிருந்து வரவழைத்து பார்வை கிடைக்க செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.