மதுரை திருப்பரங்குன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச அரிசி, காய்கறித் தொகுப்பினை மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீண்ட நெடிய நாள்களாக வேலையற்று இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இத்தகைய உதவி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுடைய நலத்திட்டங்களைப் பூர்த்திசெய்வதிலேயே அதிமுக முழு முயற்சியில் ஈடுபடுகிறது.