தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்! - எம்.எல்.ஏ தகவல்

By

Published : Oct 24, 2019, 7:20 AM IST

மதுரை: தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் மற்றும் பெய்து வரும் தொடர் மழையினால் குளங்கள் கண்மாய்கள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதாக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா

தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் மற்றும் பெய்து வரும் தொடர் மழையினால் மதுரை மாவட்டத்தில் குளங்கள் கண்மாய்கள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன என மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பெருவாரியான மக்கள் வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றினர். இரட்டை இலை சின்னம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் அவசியம் வெற்றி பெறும்” என்றார்.

பிகில் திரைப்படம் சிறப்புக் காட்சி ரத்து சர்ச்சையில் உள்ளது குறித்த கேள்விக்கு, “அமைச்சர் இது குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார். இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படும்” என்றார்

சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா

மேலும் அவர் பேசுகையில், “குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்றதில், பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மூலம் ஊரணிகள், குளங்களெல்லாம் நிரம்புகின்றன. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை. சுற்றுப்புறப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி ஆணையர் , மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என்று ராஜன் செல்லப்பா கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details