தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலைக்கழக தமிழ் பேராசிரியருக்கு தமிழ்நாடு அரசின் விருது - mku university tamil professor get award

மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி தமிழுக்கு ஆற்றிய தொண்டினை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தமிழ்ச்செம்மல் விருது வழங்கியது.

mku university tamil professor
தமிழ் பேராசிரியருக்கு தமிழக அரசின் விருது

By

Published : Jan 18, 2021, 11:35 PM IST

தமிழ்நாடு அரசு தமிழ் மொழிக்கும் அதன் வளத்திற்கும் பலம் சேர்க்கும் வகையில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக தலா ஒருவருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்துவருகிறது.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 45க்கும் அதிகமான தமிழ் இலக்கிய நூல்களை இவர் பதிப்பித்துள்ளார். 10 தமிழ் ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். 75க்கும் மேல் சர்வதேச தேசிய கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

பல்வேறு நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு வருகை தந்து சிறப்பித்தற்கு முனிவர் சத்தியமூர்த்திக்கு பங்கு உண்டு. அதேபோன்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இயங்கி வருகின்ற பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு அரசு தமிழ்ச் செம்மல் விருதுக்கு சத்தியமூர்த்தியை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பத்மபூஷண் விருதை திருப்பியளிக்கும் விவகாரம்:மறுப்புதெரிவித்த இளையராஜா

ABOUT THE AUTHOR

...view details