மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலையில் பல்வேறு பிரிவுகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் ஆபாசமாகப் பேசுவது, மாணவிகளை மிகத்தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுவது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவிகள் விரிவுரையாளர்களிடம் கூறியதையடுத்து, விரிவுரையாளர்கள் தட்டிக்கேட்டதாகவும், ஆனால் பேராசிரியர் விரிவுரையாளர்களிடமும் தவறான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்லூரியில் பணிபுரியும் ஆண், பெண் விரிவுரையாளர்களை இணைத்து அவர் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவிகள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கல்லூரி முதல்வரிடம் அளித்த புகாரின்பேரில், புகாரை விசாரிக்க குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார். ஆனால் குழுவினர் நடத்திய விசாரணையில் திருப்தி ஏற்படாததால், கல்லூரி மாணவிகள், விரிவுரையாளர்கள் ஆகியோர் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணனிடம் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் விசாரணை நடத்த துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் - விசாரணைக்குழுவை நியமித்து துணைவேந்தர் உத்தரவு - பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்
மதுரை: திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக பேராசிரியர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து துணைவேந்தர் மு. கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
mku college lecturer sexual complaint