மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழா, 59ஆவது குருபூஜை இன்று (அக் 30) நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை மேலும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற காரணத்தால் மதுரை மாநகர் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று (அக்.29) சசிகலா, முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெயலலிதா பரப்புரை வாகனத்தில் சென்று தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை!