திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்' என்று நண்பர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.