திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து கட்சியிலிருந்து அழகிரி மொத்தமாக ஒதுக்கிவைக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் அமைத்து கட்சியை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் அவர் சென்னையில் நடத்திய பேரணி அவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் மதிப்பில்லை: மு.க.அழகிரி
மதுரை: உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சியில் மதிப்பில்லை என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இதனையடுத்து நடைபெற இருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி வேலை பார்ப்பாரோ என்ற சந்தேகம் திமுகவினரிடையே எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் திமுகவில் இணையவே அழகிரி விரும்புகிறார் எனவே கட்சிக்கு எதிராக அவர் பணியாற்றமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அழகிரி பேசுகையில், “கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. கட்சியில் மாவட்டச் செயலாளர்களை வேறு எங்கோ இருப்பவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அனைவரும் சம்பளத்திற்காக வேலைபார்த்து வருகிறார்கள்” என்றார்.