மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய முயற்சிகளையும் எடுத்துவருகிறது.
அந்த வகையில் மதுரை நகரின் அனைத்து சிக்னல், முக்கியமான சந்திப்புகள் சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து பொதுமக்கள் வாகன ஒட்டிகளின் பாதுகாப்பு கருதி கண்காணித்துவருகிறது.
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
மதுரை: காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் இனி கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது. மதுரையின் அனைத்து முக்கியமான சந்திப்புகளிலும் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகர காவல் துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
பிரேம் ஆனந்த் சின்கா
இந்நிலையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல் துறை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மதுரை தெப்பக்குளம் சந்திப்பு உள்பட நகரின் 15 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு காவல் துறை உதவி ஆணையர்கள் சிவ பிரசாத், சூரக் குமரன் திருமலைக்குமார் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா கூறுகையில், "மதுரை நகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையிலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலும் மாநகர காவல்துறை புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் கையாண்டுவருகிறது.
இந்த வகையில் மதுரை நகர் நுழைவாயில் உள்பட பாலங்கள், சந்திப்புகள் என முக்கியமான இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராவானது வாகனங்களின் நம்பர் பிளேட்டை சரியாகப் படம் எடுத்துப் பதிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இனிமேல் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்றாலோ விபத்து ஏற்படுத்தி விட்டுச் சென்றாலோ கண்காணிப்புக் கேமராவில் வாகனப் பதிவெண் மிகத் துல்லியமாகப் பதிவாகிவிடும். இதன்மூலம் சந்தேகத்திற்குரிய வாகனங்களைக் கண்காணிக்கவும் வாகனங்களைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் முடியும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி!