தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது - Old man in Madurai arrested

மதுரை: திருமங்கலத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குருசாமி
கைது செய்யப்பட்ட குருசாமி

By

Published : Jun 1, 2020, 5:18 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூத்தியார்குண்டு பகுதியில் வசித்துவரும் குருசாமி (53). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஏழு வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருமங்கலத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்புணர்வு: காரைக்காலில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details