தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்! - கரோனா 2ஆவது அலை

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Feb 24, 2021, 10:41 PM IST

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கைகளால் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை என்ற மிகப்பெரிய வியூகத்தின் மூலம் தமிழ்நாட்டில் கரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில மாநிலங்களில் நோய் அதிகரிப்பை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிற மாநிலங்களில் நோய் அதிகரிப்பு உள்ளதால் தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முன்பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படும். அதற்கான மருந்துகள் தமிழ்நாடு அரசிடம் இருப்பு உள்ளது. அது மிக விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுக செய்தித் தொடர்பாளராக வைகைச்செல்வன் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details