மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக சாமானிய மக்களின் இயக்கமாக உள்ளது. எம்ஜிஆர் இருக்கும் வரை மக்கள் வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை. அதிமுகவை இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின்னர் அதிமுக அரசு நிற்குமா, நிலைக்குமா என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக அரசை வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
முதலமைச்சருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சரும், மூத்த அமைச்சர்களும் நிற்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்லில் பெற்ற வெற்றி பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்.
அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தைத்தான் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கருத்தாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு!