உலகை அச்சுறுத்திவரும் கரோனா பரவுவதைத் தடுக்கும்வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும், சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் திருமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 13 வட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்படும் திட்டத்தின் மூலம் ஐந்தாயிரத்து 931 கர்ப்பிணித் தாய்மார்களும், ஆயிரத்து 265 கண்காணிப்புத் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கும் பேறுகால முன் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அறிவுரை, சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
மேலும், தீவிர கண்காணிப்புத் தேவைப்படும் தாய்மார்களுக்கு அங்கிருந்து அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 22 ஆயிரத்து 704 உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், 14 ஆயிரத்து 649 சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர்களின் வீட்டில் அருகே மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.