கவுண்ட நதி சீரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார்
மதுரை: திருமங்கலம் தொகுதியில் ரூபாய் 3 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டுப் பகுதி தூர்வாரி அகலப்படுத்தும் பணியை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கவுண்ட நதியினை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார்
இதில் திருமங்கலம் தொகுதி உள்ள கவுண்டர் நதி ஆற்றினை அரசப்பட்டி அணைக்கட்டு பகுதியிலிருந்து குராயூர் அணைக்கட்டுவரை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை ரூபாய் 3 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
இப்பகுதியை தூர்வாருவதன் மூலம் 2 ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவு நிலம் பயன்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.