தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடி: கொண்டையுடன் கூடிய அழகிய பெண் சிற்பம் - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

கீழடி அருகே அகரம் அகழாய்வில், கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை 'இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள தமிழ் மகள்' என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/15-July-2021/12466207_keezhadi1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/15-July-2021/12466207_keezhadi1.jpghttp://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/15-July-2021/12466207_keezhadi1.jpg

By

Published : Jul 15, 2021, 3:43 PM IST

Updated : Jul 15, 2021, 4:05 PM IST

சிவகங்கை: கீழடி அருகே அகரத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தற்போது நடத்தப்பட்ட அகழாய்வில் அழகிய கொண்டையுடன் கூடிய, பெண் உருவம் போன்ற தோற்றம் கொண்ட மண்ணாலான சுதைச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கீழடி அகழாய்வு இணை இயக்குநர் பாஸ்கரன் பேசுகையில், 'மிகப்பழமை வாய்ந்த மண்ணாலான பாவையின் சிற்பம். கீழடியின் மிக குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாக அமையும்.

அழகு மட்டுமல்ல, சிறப்பு வாய்ந்தது

நமது சங்க இலக்கியங்களில் பெண்களின் சிகை அலங்காரம் குறித்து பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் பாவையின் சிகை அலங்காரம் அழகு வாய்ந்தது மட்டுமல்லாமல், சிறப்பு வாய்ந்ததும் ஆகும்' என்றார்.

கீழடி அகரம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெண் தோற்றம் கொண்ட சுதைச் சிற்பம்

தற்போது இந்தச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு ட்வீட்

அதில், 'தமிழ்ப் பொண்ணு! இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ஹேர் ஸ்டைல் எல்லாம் அந்த காலத்திலேயே அத்துப்படி.' என பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் சுதர்சன் பாஸ்கர் பேசுகையில், 'கீழடியில் கிடைத்திருக்கும் சிறிய உருவம் பெண்ணுக்கானது என அமைச்சர் பதிவிட்டிருக்கிறார். பெரும்பாலும் சரியாகவும் இருக்கலாம்.

ஆணாக இருக்கவும் வாய்ப்புண்டு

ஆயினும், ராஜராஜ சோழன் ஓவியத்தில் பக்கவாட்டு கொண்டை அவருக்கும் இருப்பதால், ஆணாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. அதுபோக சிற்பத்தில் இரு பக்கமும் குண்டலம் தெளிவாக இருக்கிறது. அதுபோக காது நீண்டிருக்கிறது.

கீழடி காலத்தில் சிற்பம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி

உலகம் முழுக்க பழங்குடிகளாக மக்கள் வாழ்ந்த காலம்தொட்டு, நீண்ட காதுகளுடன் அணிகலன்கள் அணிதல் பொதுவான விஷயம். இருப்பினும் கிராமத்தில் காது நீண்டிருந்தாலே 'பௌத்த ஜைன எச்சம்' என்று சொல்பவர்களும் உண்டு.

ராஜராஜ சோழன் ஓவியம்

ஆனால், அதை முடிவுகட்டும் விதமாக கிமு.580 என காலக்கணக்கீடு செய்யப்பட்ட கீழடி காலத்தில், ஆபரணங்களுடன் இப்படியான ஒரு சிறிய சிற்பம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

இதையும் படிங்க:பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : Jul 15, 2021, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details