மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில்,"127 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானவர்களுக்கு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமானது. மு.க.ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு அம்னீசியா நோய் என நினைக்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்துள்ளதால் அரசைக் குற்றம்சாட்டி பேசி வருகிறார்.