மதுரை திருமங்கலம் மெயின் ரோடு, ஜவகர்புரத்தில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ' பிரபல வானொலி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆளுமை மிக்கத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக கூறியுள்ளனர். மக்களுக்காக மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டதே கூட்டுறவுச் சங்கங்கள்.
திமுக காலத்தில் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய கடனில் மூழ்கி இருந்தது. ஆனால், தற்போது கணினி மயமாக்கப்பட்டு, சரியான அலுவலர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் நான் பொறுப்பு ஏற்ற பிறகு 29 இடங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.