மதுரை வைகையாற்றில் திடீரென பெருகிய வெள்ளநீரின் காரணமாக ஆகாயத்தாமரையுடன் நுரை பொங்க காட்சி அளித்தது. ஆகையால் ஜேசிபி மூலம் அதனை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அணையில் தண்ணீர் திறக்காமலேயே வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றிரவு (நவ. 27) பெய்த கனமழை காரணமாக ஆற்றில் அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள் தற்போது அகற்றப்பட்டுவருகின்றன. 245 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை நன்னீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.