தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ - அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

மதுரை: ரஜினிகாந்த் ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவு எடுத்து இருக்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

minister sellur raju
minister sellur raju

By

Published : Dec 30, 2020, 3:23 PM IST

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக படகு சவாரி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெப்பக்குளத்தில் படகு சவாரி விடும் நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மதுரை ஆட்சியர் அன்பழகன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, "மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மதுரையின் மெரினாவாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். திமுக ஆட்சிக்கு வர கடுகு அளவு கூட வாய்ப்பில்லை.

ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் அழகான முடிவெடுத்து இருக்கிறார். தன்னை நம்பியுள்ள ரசிகர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக எடுத்துள்ள ரஜினியின் முடிவை வரவேற்கிறேன். ரஜினி தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளார். திரைத்துறையில் தமிழ்நாட்டிற்காக பல்வேறு பெருமையை தேடி தந்தவர் கமல். அவர் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம், அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆக முடியாது" என விமர்சித்து பேசினார்.

நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது

இதையும் படிங்க:அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையான மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details