தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள், நீச்சல் குளங்களின் பாதுகாவலர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வழங்குவதில் திமுக நாடகம் ஆடிவருகின்றது. அக்கட்சி எந்த காலத்திலும் மக்களுக்கு உதவி செய்தது கிடையாது. திமுகவினர் பல டிவி சேனல்கள் நடத்திவருகிறார்கள்.
அதிகமான கேபிள் டிவி நடத்தி பல கோடிக்கணக்கான வருமானம் பெற்றுவருகிறார்கள். திமுகவினர் நினைத்தால் பல கோடி ரூபாய் பணத்தை பொதுமக்களுக்கு கொடுத்து உதவலாம். ஆனால், செய்ய மாட்டார்கள். நாங்கள் கொடுத்து கொடுத்து சிவந்த எம்ஜிஆரின் வாரிசுகள்.
அரசுத் துறைகளின் வாயிலாகவும், அதிமுக என்ற தனி கட்சியின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை இந்த கரோனா காலத்தில் நாங்கள் செய்துவருகிறோம். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியை அறிமுகமாக இருந்த ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழும்” என்றார்.
மேலும், நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெறுமனே வாய்ஸ் மட்டுமே கொடுத்து செல்பவர்” என்றார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு இதையும் படிங்க: ‘2000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு’ - அமைச்சர் எம்.சி. சம்பத்