தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேலும் பலர் சிக்குவர்' - அமைச்சர் செல்லூர் ராஜூ - minister sellur raju

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் திமுகவில் மேலும் பலர் சிக்குவர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

minister sellur raju 2g scam
2ஜி வழக்கில் மேலும் பலர் சிக்குவர்'- அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : Oct 18, 2020, 3:35 PM IST

மதுரை: அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை தவிட்டுச்சந்தை பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவின் கொடியை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணி வைத்துக்கொண்டு தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களுடைய கூட்டணிக் கட்சி செயல்படுகிறது. அவர்களின் செயல்பாடு எங்களுக்குப் பிடித்துள்ளது. அதன் காரணமாக அவர்களுடன் தோழமை கொண்டிருக்கிறோம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் தற்போது சிக்கியுள்ளார். இன்னும் பலர் சிக்க வேண்டியுள்ளது. இந்தியை எதிர்ப்பது போன்று நாடகமாடும் திமுகவினர், அவர்கள் நடத்துகின்ற பள்ளியில் மட்டும் இந்திப் பாடத்தை நடத்துகிறார்கள். 2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

அதில், பலர் சிக்க இருக்கிறார்கள். எங்களுக்கு என சுய செல்வாக்கு இருக்கிறது. தோழமைக் கட்சி செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்கிறோம். நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது.

'2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேலும் பலர் சிக்குவர்'- அமைச்சர் செல்லூர் ராஜூ

மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதம் பன்மடங்கு கூடி இருக்கிறது. வரும் ஆண்டுகளில், எங்களுக்குப் போட்டி திமுக மட்டுமே. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகள் இல்லை. நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம். அடுத்தவர்களின் காலை நம்பி நிற்கவில்லை. திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது. ஊழலுக்குப் பெயர் பெற்ற கட்சி திமுக" என்றார்.

இதையும் படிங்க:’கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை திமுக இரட்டை வேடம்’

ABOUT THE AUTHOR

...view details